உள்ளூர் செய்திகள்
இறந்து போன சண்முகம்

ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

Published On 2022-04-30 14:23 IST   |   Update On 2022-04-30 14:23:00 IST
சங்கராபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்.
புதுச்சேரி:

திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றை கடக்க முயன்ற ஒருவர்  திடீரென ஆற்றில் மூழ்கினார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் திருக்கனூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

 அதன்பேரில் திருக்கனூர் தீயணைப்பு நிலைய அதிகாரி லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆற்றில் இறங்கி தேடினர். இரவு முழுவதும் தேடியும்  கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில்  மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது ஆற்றில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தொலைவில் அவரது பிணம் மிதப்பதை கண்டனர். 

இதையடுத்து திருக்கனூர்  போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செட்டிப்பட்டு மேலாண்டை வீதியைச் சேர்ந்த சண்முகம் (வயது 47).கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. 

திருமணமான இவர் மனைவியை பிரிந்து  வாழ்ந்து வந்ததாகவும், வெளியூருக்கு கூலி வேலைக்கு செல்லும் இவர் சொந்த ஊரான செட்டிப்பட்டு வரும்போது 

அங்குள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு  அப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். நேற்று அதேபோன்று சாராயக் கடையில் குடித்து விட்டு ஆற்றில் குளி ப்பதற்காக  இறங்கிய போது அவர் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
 
எனினும்  போலீசார் வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News