உள்ளூர் செய்திகள்
போச்சம்பள்ளி அருகே மினி பஸ் மோதி வாலிபர் சாவு
போச்சம்பள்ளி அருகே மினி பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பெரியகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது31). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இவர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது போச்சம்பள்ளி ஐந்து ஆழமரம் அருகே வரும் போது எதிரே வந்த மினிபஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.