உள்ளூர் செய்திகள்
தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

Published On 2022-04-29 15:57 IST   |   Update On 2022-04-29 15:57:00 IST
உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48) விவசாயி. இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்கள் இருவருக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு கணவன், மனைவி இருவரும் 13 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் உள்ள மாமரத்தில் முருகன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் உடலைக் கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இவரை யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News