உள்ளூர் செய்திகள்
போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர கடைகள்

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர கடைகள் அகற்றப்படும்- நகரமன்ற தலைவர் சுப்ராயலு எச்சரிக்கை

Published On 2022-04-27 09:37 GMT   |   Update On 2022-04-27 09:37 GMT
உழவர் சந்தை முன்பு சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த கீரை, பழங்கள், காய்கறி உள்ளிட்ட சாலையோர கடை மற்றும் தள்ளுவண்டி கடைகாரர்களிடம் சாலையோரம் கடைகள் அமைப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் உழவர் சந்தைக்கு முன்பு சாலையோரக் கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இதனால் அப்பகுதியில் பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரி டம் புகார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்ராயலு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உழவர் சந்தை முன்பு சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த கீரை, பழங்கள், காய்கறி உள்ளிட்ட சாலையோர கடை மற்றும் தள்ளுவண்டி கடைகாரர்களிடம் சாலையோரம் கடைகள் அமைப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே சாலையோர கடைகள் அமைக்க கூடாது. மீறி கடைகள் அமைக்கப்பட்டால் நகராட்சி பணியாளர்கள் மூலம் கடை அப்புறப்படுத்தப்படும் என எச்சரித்தார். முன்னதாக பேருந்து நிலையத்திலுள்ள கழிவறையை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த ஒப்பந்ததாரரிடம் கழிவறையை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது வார்டு கவுன்சிலர் பால்ராஜ் உடனிருந்தனர்.

Tags:    

Similar News