உள்ளூர் செய்திகள்
22 தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது
பர்கூர் மலைகிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட 22 தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு:
பர்கூர் மலைகிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட 22 தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்தியூர் அருகே மழை மேகங்கள் தவழும் பர்கூர் மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1050 மீட்டர் உயரத்தில் அமைந்து ள்ளது. இங்குள்ள 34 கிராமங்களில் ஏறத்தாழ 18 ஆயிரம் மக்கள் வசிக்கின் றனர்.
இங்கு மானாவரி சாகுபடியாக கம்பு, சோளம், கேழ்வரகு அதிகம் பயிரிடப்படுகின்றன. சமவெளிப்பகுதியை விட கூடுதலாக மழைப்பொழிவு இருந்தாலும், பூலோக அமைப்பில் நீர்த்தேக்க வசதிகள் இல்லாததால் மழை நீர் சிற்றோடைகளில் பெருக்கெடுத்து வடிந்து விடும்.
இதற்காக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், பெஜலட்டி, கல்வாரை, கடையரெட்டி, பெஜிலிப்பாளையம், தொல்லி, செங்குளம் உள்பட 22 இடங்களில் தடுப் பணைகளை கட்டி தண்-ணீரை தேக்க திட்ட மிட்டது.
இதற்காக சுமார் ரூ. 2.50 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல்& அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மலை கிராம மக்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டன.
இவற்றில் 15 தடுப் பணைகள் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மற்றவை 90 சதவீதம் பணிகள் முடிவடையும் நிலையிலும் உள்ளன. 5 அடி முதல் 15 அடி வரை உயரம் கொண்ட இந்த தடுப்பணைகள் தற்போது கோடையிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதுடன் அருகில் உள்ள நிலங்களில் கோடையிலும் பயிர் சாகுபடி செய்ய ஏற்ற சூழல் இருப்பதாக மலைகிராம மக்கள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு தடுப்பணைக்கும் தலா 50 ஏக்கர் வீதம் 22 தடுப்ப ணைகள் மூலம் குறைந்த பட்சம் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் என்றும், கால்நடைகள் மற்றும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலும் என்றும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
முதல்கட்டமாக தற்பொழுது கட்டப்பட்ட 22 தடுப்பணைகளை போலவே இன்னும் வாய்ப்புள்ள இடங்களில் கூடுதலாக தடுப் பணைகள் கட்டித்தரவும் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கல்வாரை, தேவர்மலை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை நம்பி பயிர் சாகுபடி செய்வதும், மற்ற காலங்களில் மாற்று வேலை தேடி சமவெளி பகுதிக்கு செல்வதும் மலை கிராம மக்களின் வழக்கம்.
கடின உழைப்பாளிகளான மலைவாழ் மக்களுக்கு போதுமான நீராதாரத்தையும் பயிர் சாகுபடிக்கான சூழலையும் உருவாக்கும் போது இவர்களின் வாழ்க் கையும், பொருளாதாரமும் நிச்சயம் மேம்படும் என்பது உறுதி. இவ்வாறு அவர்கள் கூறினர்.