உள்ளூர் செய்திகள்
மகனை அடித்து கொன்ற தந்தை சிறையில் அடைப்பு
கவுந்தப்பாடி அருகே மகனை அடித்து கொன்ற தந்தை கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
கவுந்தப்பாடி அருகே மகனை அடித்து கொன்ற தந்தை கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கவுந்தப்பாடி அருகே உள்ள திங்களூர் நிச்சாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வர் காளியப்பன் (வயது 26). இவரது மகன் பெரியசாமி (42). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.
இந்த நிலையில் கடந்த 19&ந் தேதி வீட்டில் இருந்த பெரியசாமியை காணவில்லை. இது குறித்து காளியப்பன் திங்களூர் போலீசில் தனது மகனை காணவில்லை. அவரை கண்டு பிடித்து தர வேண்டும் என புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரிய சாமி வீடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஒரு சாக்கு மூட்டை மிதந்து கொண்டு இருந்தது. மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திங்களூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந் தனர்.
தொடர்ந்து போலீசார் அது காணாமல் போன பெரியசாமியாக இருக்கலாம் என கருதி அவரது தந்தை காளியப்பனிடம் அடை யாளம் காட்டுமாறு கூறினர். அவர் பிணத்தை பார்த்து தனது மகன் பெரியசாமி தான் என கூறினார். இதை யடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து காளியப்பன் மீது சந்தேகம் அடைந்த வாய்க்காலில் வீசியதை ஒப்பு கொண்டார்.
தொடர்ந்து அவர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப் பதாவது:-
பெரியசாமி என்னிடம் தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.1 லட்சம் பணம் கேட்டார். ஆனால் நான் பணம் கொடுக்க மறுத்து விட்டேன். அப்போது பெரியசாமி சென்று விட் டார். அன்று இரவு பெரிய சாமி மீண்டும் வந்து பணம் கேட்டார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி கடப்பாரை எடுத்து என்னை அடிக்க முயன்றார். இதை தடுத்து அவரிடம் இருந்த கடப் பாரையை பிடுங்கி அவரை அடித்தேன். மேலும் அருகே இருந்த உருட்டு கட்டையை எடுத்து தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.
இதையடுத்து அவரது பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கீழ்பவானி வாய்க் காலில் வீசி விட்டு வந்து விட்டேன். தற்போது போலீ சார் உண்மையை கண்டு பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இது குறித்து திங்களூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.
பின்னர் காளியப்பனை பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து காளியப்பன் பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.