உள்ளூர் செய்திகள்
போளூர் பகுதியில் உள்ள அரசு மாணவர்-மாணவி விடுதிகளில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்த காட்சி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் விடுதிகளில் முறைகேடு குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2022-04-26 17:30 IST   |   Update On 2022-04-26 17:30:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் விடுதிகளில் முறைகேடு குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணா மலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, கலசப்பாக்கம், போளூர், செங்கம் சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம் உட்பட 12 வட்டாரத்தில் மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் 49 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. 

இதில் தாய் தந்தை இழந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 

விடுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும், கல்லூரி மாணவனுக்கு 1100 ரூபாயும் அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள 49 விடுதிகளுக்கு மாணவர்களுக்கு 3 வேளையும் சத்தான உணவு வழங்குவதற்காக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனோ வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விடுதிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது கடந்த டிசம்பர் மாதம் முதல் விடுதிகள் அனைத்தும் இயங்கத் தொடங்கியுள்ளன. 

விடுதிகளில் வார்டன் அங்கே தங்கி இருந்து மாணவர்களுக்கு பாதுகாப் பாகவும் 3 வேளையும் உணவு அளிக்க ஏற்பாடு செய்யது படிப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும். 

ஆனால் பல்வேறு விடுதிகளில் வார்டன்கள் தங்குவதில்லை அதேபோல் மாணவர்களும் விடுதியில் தங்காமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். 

மாவட்டத்தில் பெரும்பாலான விடுதிகளில் மாணவர்கள் பயிலா மலேயே தங்கி பயிலுவதாக விடுதி காப்பாளர்கள் போலியாக வருகைப் பதிவேடு தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் குற்றம் சாட்டினர். 

மேலும் இது சம்பந்தமாக மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரிகள் மற்றும் கலெக்டர் நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள அனைத்து மாணவர்கள் விடுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் உதவி கலெக்டர்கள் தலைமையில் அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டன.

இதில் பல்வேறு விடுதிகளில் முறைகேடுகள் நடப்பதை கண்டுபிடித்து அதற்கான அறிக்கையும் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

 இதில் முதல்கட்டமாக 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று  வருகிறது.

Similar News