உள்ளூர் செய்திகள்
யானை நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

பர்கூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு

Published On 2022-04-26 10:05 IST   |   Update On 2022-04-26 10:05:00 IST
நடுரோட்டில் யானை நிற்பதை பார்த்த 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தினர். யானையும் நகராமல் சாலையின் நடுவே தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரம் நின்ற காட்டு யானை பின்னர் காட்டுக்குள் சென்றது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி மயானம் அருகே பர்கூர்- அந்தியூர் பிரதான சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையில் நின்று அங்கிருந்த மூங்கில் தூர்களை முறித்து தின்று கொண்டிருந்தது.

அப்போது பர்கூரிலிருந்து 108 ஆம்புலன்சு எலச்சிபாளையம் மலை கிராமத்திற்கு நிறைமாத கர்ப்பிணியை பிரசவத்திற்காக அழைத்துவர சென்றது.

நடுரோட்டில் யானை நிற்பதை பார்த்த 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தினர். யானையும் நகராமல் சாலையின் நடுவே தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரம் நின்ற காட்டு யானை பின்னர் காட்டுக்குள் சென்றது.

அதன் பின்னரே ஆம்புலன்சு டிரைவர் வண்டி அங்கிருந்து எடுத்து கர்ப்பிணியை மீட்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து அனுமதித்தார். யானைகள் உணவு தண்ணீர் தேடி சாலையோரம் அடிக்கடி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், யானை அருகில் சென்று புகைப்படம் எடுப்பது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News