உள்ளூர் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்த வடமாநில தம்பதி கைது
புஞ்சை புளியம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தம்பதி கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தம்பதி கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி பனையம்பள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை நடை-பெறுவதாக புஞ்சைபுளி-யம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப் அலி(26) அவரது மனைவி ஜூலைக்கான்கத் தூண்(22) ஆகியோர் பனையம்-பள்ளியில் இருந்து தேசி-பாளையம் செல்லும் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்து இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.