உள்ளூர் செய்திகள்
எட்டிவாடி மலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் பிணம்.

ஆரணி அருகே நிர்வாண நிலையில் எலும்பு கூடாக பெண் பிணம்

Published On 2022-04-25 15:20 IST   |   Update On 2022-04-25 15:20:00 IST
ஆரணி அருகே நிர்வாண நிலையில் எலும்பு கூடாக பெண் பிணம் மீட்கப்பட்டது.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருவண்ணாமலை வேலூர் சாலை பாலாற்றுவென்றான் கிராமத்தின் கூட்ரோடு அருகில் ரெயில்வே சரக வன பகுதியில் நிர்வாண நிலையில் சுமார் 35வயது மதிக்கதக்க பெண் பிணம் கிடந்தது.

ஆடு மேய்ப்பவர்கள் பிணத்தை கண்டு அதிர்ச்சியடைந்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தொவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பாசோதனைக்கு வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இறந்த பெண் கொலை செய்யபட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா எனவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News