உள்ளூர் செய்திகள்
காஞ்சி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தை துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் புறக்கணிப்பு
காஞ்சி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தை துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சி பஞ்சாயத்தில் நேற்று நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் துணைத் தலைவர் மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள் புறகணிப்பு செய்து விட்டனர்.
காஞ்சி ஊராட்சி மன்றத்தின் சார்பில் நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு கிராம சபா நடந்தது நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதிகோபால் தலைமையில் நடந்தது. இதில் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என யாரும் கலந்து கொள்ளாததால் அங்கு வந்திருந்த மக்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர் அப்போது சிறு சலசலப்பு ஏற்பட்டது.
இதன் பின்னரே கடலடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை அமைதிப்படுத்தினார் இருப்பினும் சிறப்பு கிராம சபா குறித்து முறைப்படி துணை தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்காதது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வதற்காக நடத்தப்படும் இதுபோன்ற கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கே அழைப்பு இல்லாதபோது இந்த கிராமத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பொதுமக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.