உள்ளூர் செய்திகள்
சேவல் வைத்து சூதாடிய 8 பேர் கைது
சேவல் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருங்கல்பாளையம்:
சேவல் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருங்கல்பாளையம் சப்&இன்ஸ்பெக்டர் ராம்பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் வெற்றி நகர் அருகே ஒரு காலி இடத்தில் சிலர் கும்பலாக சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்தக் கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் முகமது அப்பாஸ்(20), ஜீவானந்தம் (43), கர்ப்பகராஜன் (34), யோகேஸ்வரன் (21), குணசேகர் (21), முரளி (28), ரோகிட்(23), அரவிந்தன் (23) ஆகியோர் என்பதும் இவர்கள் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேர் கும்பலை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள், 9 சேவல்கள், ரூ 24 ஆயிரத்து 600 ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.