உள்ளூர் செய்திகள்
கீழ்பென்னாத்தூர் அருகே சிறப்பு மருத்துவ முகாம்
கீழ்பென்னாத்தூர் அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், மேக்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திற்குட்பட்ட கீக்களூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடந்த சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஏ.எஸ். ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், புஷ்பா சதாசிவம், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு கலைஞர் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மருத்துவர்கள் கலந்துகொண்டு கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு, சம்பந்தப்பட்ட நோய்கள், நீரழிவு நோய், காச நோய், இருதய நோய், இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு, கொழுப்பின் அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, இரத்தம் மற்றும் சிறுநீரில் உப்பு சர்க்கரைஅளவு கண்டறிதல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறிய பாப் தடவல், கண்புரை கண்டறிதல் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கபடுதல் என பல்வேறு நோய்களுக்கும் பரிசோதனை செய்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் வேட்டவலம் விஜயகுமார், மருத்துவ அலுவலர்கள் வெங்கடேசன், சக்தி பிரியன், ராஜலட்சுமி, ஸ்ரேயா உள்ள மருத்துவ குழுவினர்கள், கிராம செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில், வட்டாட்சியர் சக்கரை, வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், கிராம நிர்வாக அலுவலர்கள், கீக்களூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலநந்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செயலாளர் ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சரோஜினி அன்பழகன் மற்றும் கீக்களூர், மேக்களூர், கத்தாழபட்டு, செவரபூண்டி உட்பட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.