உள்ளூர் செய்திகள்
விழாவில் நூல்களை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட அதனை கென்னடி எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்ட காட்சி.

புத்தக வெளியீட்டு விழா

Published On 2022-04-25 10:09 IST   |   Update On 2022-04-25 10:09:00 IST
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
புதுச்சேரி:

பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவலர் சரசுவதி வைத்தியநாதன் எழுதிய குடும்பம் ஒரு கோவில்,  வானவில் பூக்கள் ஆகிய 2 நூல்கள் வெளியீட்டு விழா ஆந்திர மகாசபாவில் நடைபெற்றது. 

அமைச்சர் லட்சுமி நாராயணன்  நூல்களை வெளியிட்டார். அதனை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பெற்று கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு   பாரதிதாசன் பேரன் பாரதி முன்னிலை வகித்தார், விழாவில் பாரதிதாசன் அறக்கட்டளை உறுப்பினர்கள், சமூக ஆய்வாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள்  கலந்து கொண்டனர்.

Similar News