உள்ளூர் செய்திகள்
பா.ஜனதா அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் பேசிய காட்சி. அருகில் மத்திய உள்த

புதுச்சேரியை சிறந்த மாநிலமாக மாற்றுவோம் மத்திய மந்திரி அமித்ஷா உறுதி

Published On 2022-04-25 10:05 IST   |   Update On 2022-04-25 10:05:00 IST
பிரதமரின் வாக்குறுதிப்படி சிறந்த புதுவையாக மாற்றுவோம் மத்திய மந்திரி அமித்ஷா உறுதியளித்தார்.
புதுச்சேரி:

புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில்  மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்று கிழக்கு கடற்கரை சாலையில் புதிய பஸ் நிலையம், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்து.  பேசியதாவது:-

புதுவை மக்களின்  ஆதரவால் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறந்த  புதுவையாக்குவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

நாங்கள் மீண்டும் வரும் போது சிறந்த புதுவையாக மாற்றி விட்டுத்தான் வருவோம்.  அதன் ஒருகட்டமாகத்தான் இப்போது ரூ.362.91 கோடியில் புதிய பஸ் நிலையம்,, தாவரவியல் பூங்கா விரிவாக்கம், சூரிய மின்ஒளி தயாரிப்பு திட்டம்,  பாரம்பரிய நகரம், சுற்றுலா திட்டம் என பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளோம். 

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லஞ்ச, ஊழல் மட்டுமே இருந்தது. என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சி மாநில  மக்களின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சி ஏழைகளைப்பற்றி கவலைப்படாத பொய் தகவல்கூறும் ஆட்சியாக நடந்து வந்தது. பிரதமர் மோடி கூறியபடி புதுவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம்  ஆகியோர் சிறந்த புதுவையாக மாற்றுவார்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News