உள்ளூர் செய்திகள்
புனரமைப்பு செய்யப்படவுள்ள வாய்க்கால் பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ள வாய்க்கால் பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
ஈரோடு:
கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ள வாய்க்கால் பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
செய்தார்.
ஈரோடு-மாவட்டம் நம்பியூர்-வட்டம் எலத்தூர் செட்டிபாளையம் முதல் கோபிசெட்டிபாளையம் வட்டம் சிறுவலூர் வரை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில் அமைச்சர் முத்துசாமி கீழ்பவானி திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்-படவுள்ள வாய்க்கால் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்தஆய்வின்போது அமைச்சர்முத்துசாமி கீழ்பவானிதிட்டத்தின் கீழ் நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட எலத்தூர் செட்டிபாளையம், கரட்டுப்பாளையம், குருமந்தூர் மற்றும் கோபி-செட்டி பாளையம் வட்டத் திற்குட்-பட்ட-கோட்டுப்-புள்ளாம்பாளையம், அயலூர், கலிங்கியம், சிறுவலூர் ஆகிய பகுதிகளின் வழியே செல்லும் கீழ்பவானி பிரதான கால் வாய் மற்றும் கிளைக்கால் வாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்பு பணிகள் தொடர்பாக விவசாயிகள், விவசாய சங்கபிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கருத்-துக்களைக் கேட்டறிந்-தார்.
இதை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-
வாய்க்கால் தரைதளத்தில்-கான்கிரீட் அமைக்க கூடாது எனஅரசுஅறிவுறுத்துள்ளது.அதன்படிகான்கிரீட் தளம் அமைப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கின்-றேன். மேலும், மண்கரை வாய்க்காலில் 33 சதவீதம் கசிவுநீர் வெளியேற்றலாம் என வரையறுக்கப்பட்டுள் ளது. அதன்படி, அதற்கு அதிகமாக உள்ள கசிவுநீரை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அதிகமாக தண்ணீர் வீணாகும் இடங்கள், கரைகளில் உடைப்பு மற்றும் பலவீனமான பகுதிகள் ஆகிய இடங்களில் மட்டும் கான்கிரீட் பக்கவாட்டு சுவர்கள் அமைக்க நடவ-டிக்கை மேற்-கொள்ளப்-படும்.
இந்தப் பணிகளும் விவசாயிகள் மற்றும் பொது-மக்களிடம் கருத்துகளைக் கேட்டு மேற்கூரிய பணிகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து, வாய்க்கால் முழுவதும் தூர் வாருவதற்கு நடவடிக்கை மேற்-கொள்ளப்படும். அவ்வாறு தூர்வாருகின்ற மண் விவசாயிகளின் கருத்தின்படி, அந்தந்த வாய்க்கால் கரைகளை பலப்படுத்தும் வகையில் வாய்க்கால் கரைகளில் பயன்-படுத்தப்-படும். மேலும் வாய்க்கால் கரைகளை பலவீனபடுத்துகின்ற மரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்தந்த மரங்களைஅகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்-கொள்ளப்--படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் போது, கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பழனிதேவி, கீழ்பவானி வடிநிலகோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவிசெயற்-பொறியாளர் ஆனந்தராஜ்உமாபதி, உதவி-பொறியா-ளர்கள் சதீஷ்-குமார், அய்யன்துரை, ரமேஷ், கோபிவருவாய் வட்டாட்சியர் தியாகராஜன் உட்பட பலர் கடந்து கொண்டனர்.