உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நாளை தொடக்கம்

Published On 2022-04-24 15:15 IST   |   Update On 2022-04-24 15:15:00 IST
ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நாளை தொடங்குகிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நாளை தொடங்குகிறது.

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே மாதம் 5-ந் தேதி முதல் 31--ந் தேதி வரை நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வினை 24,909 மாணவ-மாணவிகளும், பிளஸ்- 1 பொதுத்-தேர்-வினை 27,656 மாணவ-மாணவிகளும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை 28,365 மாணவ- மாணவி-களும் எழுத உள்ளனர்.

இந்நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இதற்காக செய்முறை தேர்வு பயிற்சி வகுப்புகள் நடந்த அனைத்து பள்ளிகளிலும் பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுக்காக மாணவ, மாணவிகள் பகுதி பகுதியாக பிரிக்கப் பட்டுள்ளனர்.

மேலும், தனித் தேர்வர்களும் செய்முறை தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு வரும் மே மாதம் 2-ற் தேதியுடன் நிறைவடைகிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News