உள்ளூர் செய்திகள்
தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை
மழை காரணமாக வரத்து குறைந்ததுள்ளதால் வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது காணப்படுகிறது.
ஈரோடு:
மழை காரணமாக வரத்து குறைந்ததுள்ளதால் வ.உ.சி. மார்க்கெட்டில்
காய்கறி விலை உயர்ந்தது காணப்படுகிறது.
ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட் தற்காலி கமாக செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், பகலில் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி, சத்தியமங்கலம், திண்டுக்கல், ஒட்டன்-சத்திரம், கிருஷ்ணகிரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங் களில் இருந்து இங்கு காய்கறிகள் அதிக அளவில் வரத்தாகி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்து உள்ளது.
வ.உ.சி. காய்கறி மார்க் கெட்டில் இன்று வழக்-கத்தை விட காய்கறிகள் வரத்து குறைந்ததன் காரணமாக பல்வேறு காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்-துள்ளது.
கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ரூ. 10 முதல் ரூ.25 வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
குறிப்பாக வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 50 டன் தக்காளி வரத்தாகும். ஆனால் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இன்று கர்நாடகா ஆந்திராவில் இருந்து வெறும் 20 டன் மட்டுமே தக்காளி வரத்து ஆகி இருந்தது.
இதனால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது.
கடந்த 10 நாட்களாகவே தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதேபோல் மற்ற காய்கறிகளையும் சற்று அதிகரித்துள்ளது.
இன்று விற்கப்பட்ட காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-
கடந்த வாரத்தில் ரூ.60-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் இந்த வாரம் ரூ.80-க்கு விற்கப்படுகிறது. பீட்ரூட்-50, கேரட்-50, கத்திரிக்காய்-25, வெண்டைக்காய்-40, பீர்க்கங்காய்-60, பாவைக் காய்-50, முள்ளங்கி-30, முருங்கைக்காய்-40, கருப்பு அவரை-50, மிளகா-40, இஞ்சி-50, முட்டைக் கோஸ்-25, காலிபிளவர்-15, சின்னவெங்காயம், பெரிய வெங்காயம்-20.