உள்ளூர் செய்திகள்
திம்பம் மலைப்பாதையில் மரத்தின் மீது சிறுத்தை ஹாயாக படுத்திருப்பதை படத்தில் காணலாம்.

மரத்தின் மீது படுத்திருந்த சிறுத்தை

Published On 2022-04-24 14:44 IST   |   Update On 2022-04-24 14:44:00 IST
திம்பம் மலைப்பாதையில் மரத்தின் மீது சிறுத்தை படுத்திருந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
தாளவாடி:

திம்பம் மலைப்பாதையில் மரத்தின் மீது சிறுத்தை படுத்திருந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், திம்பம், பவானிசாகர், பண்ணாரி பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிறுத்தைகள் தங்களது எல்லையை அதிகரித்து வருவதால் வனத்தை யொட்டி உள்ள  கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் தமிழகம்&கர்நாடகவை இனைக்கும் திம்பம் மலைப் பாதையில் வனவிலங்குகள் வாகனத்தில் அடிபட்டு இறப்பதை தடுக்க இரவு நேரத்தில் வாகன போக்கு-வரத்துக்கு தடைவிதிக்கப்-பட்டது.

இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் இருந்து கோவை நோக்கி பஸ் ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக இரவு 8.30 மணியள வில் சென்று கொண்டி ருந்தது. அப்போது 17- வது கொண்டை ஊசி வளைவு அருகே செல்லும் போது அங்கு உள்ள மரத்தின் மீது சிறுத்தை ஒன்று ஹாயாக படுத்திருந்தது.

இதை பஸ்சில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். பின்னர்  சிறுத்தை மெதுவாக காட்டுக்குள் சென்றது. சிறுத்தை அடிக்கடி திம்பம் பாதையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News