உள்ளூர் செய்திகள்
கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் கீழ் பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
வட்டார வளமைய மேற் பார்வையாளர் செல்வம் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
மாவட்ட உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி கலந்துகொண்டு, 85 மாற்று திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை, பஸ் பயண சலுகை அட்டைகளை வழங்கினார்.
முகாமில் 114 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ வசதிகளை பெற்றனர்.
முகாமில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் மஞ்சு, அம்பிகா, மணி, சரண்யா, கிருஷ்ணபிரியா மற்றும் மருத்துவ குழுவினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.