உள்ளூர் செய்திகள்
கொரோனா மேலாண்மை குழு கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு

Published On 2022-04-24 09:39 IST   |   Update On 2022-04-24 09:39:00 IST
தொற்று பரவல் எதிரொலியாக கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

அண்மைக்காலமாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவிவரும் சூழலில் கொரோனா மேலாண்மைக் குழு கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. 

கவர்னர் தமிழிசை  தலைமை தாங்கினார்.தலைமைச்செயலர் அஸ்வனிகுமார், ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன், சுகாதாரத்துறைச்செயலாளர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி டாக்டர் சாய்ரா பானு, தனியார் மருத்துவ கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மருந்து, தடுப்பூசி உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்தல், காலியாக உள்ள பணியிடங்களை அவசரகால தேவை கருதி நிரப்புதல், கூட்டு நடவடிக்கை குழுக்கள் அமைத்தல், கொரோனா வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை மையங்கள் அமைத்தல், தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துதல், குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்துதல், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Similar News