உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.

240 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-04-23 15:45 IST   |   Update On 2022-04-23 15:45:00 IST
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 240 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு:


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 240 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 47 ஆயிரத்து 500 மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. 

இதேப்போல் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90 ஆயிரத்து 500 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79 ஆயிரம் மதிப்பில்  சக்கர நாற்காலி, 15 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.41 ஆயிரத்து 700 மதிப்பில் காதொலி கருவி, 20 மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள் வழங்கப் பட்டன.

மேலும் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவி தொகை, 84 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் வழங்கும் திட்டம் என மொத்தம் 240 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 26 லட்சத்து 26 ஆயிரத்து 275 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Similar News