உள்ளூர் செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.55 லட்சம் வசூல்
சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் நிரந்தர உண்டியல் எட்டு உண்டியல் திறந்தனர். இதில் ரூ.55 லட்சத்து 23 ஆயிரத்து 313 ரொக்கம் இருந்தது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் நிரந்தர உண்டியல் எட்டு உண்டியல் திறந்தனர். இதில் ரூ.55 லட்சத்து 23 ஆயிரத்து 313 ரொக்கம் இருந்தது.
சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில் கொரோனா காலங்களுக்கு பின்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் 18-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்பு கட்டுபாடுகளுடன் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் பக்தர்கள் காணிக்கை உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில் நிரந்தர உண்டியல் எட்டு உண்டியல் திறந்தனர். இதில் ரூ.55 லட்சத்து 23 ஆயிரத்து 313 ரொக்கம் இருந்தது.
மேலும் தங்கம் 196 கிராம், வெள்ளி இரண்டு கிலோ 665 கிராம் இருந்தது. உண்டியல் திறப்பில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சபர்மதி, சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், ஆய்வாளர் ரவிக்குமார், தக்கார் சந்திரசேகரன், கோமதி, ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் உட்பட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணினர்.
இதேபோல் பவானி செல்லியாண்டியம்மன் கோவில் உண்டியல் திறப்பு நேற்று மாலை செயல்-அலுவலர் (கூடுதல்-பொறுப்பு)அன்புதேவி, ஈரோடு உதவி ஆணையர் அன்னக்கொடி,ஈரோடு ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிரந்தர உண்டியல்கள் 4, தற்காலிக உண்டியல்கள் 5 என மொத்தம் 9 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோவில் பணியாளர்கள், மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் ரூபாய்நோட்டு, மற்றும் சில்லரை நாணயங்கள் என மொத்தம் ரூ.5 லட்சத்து 27ஆயிரத்து 408 காணிக்கையாக வரப்பெற்றது. இதில் தங்கம் 26 கிராம், வெள்ளி 434 கிராம் காணிக்கையாக வரப்பெற்றது.