உள்ளூர் செய்திகள்
சென்னிமலை டவுன், மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள்.

சென்னிமலை மாரியம்மன் கோவில் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

Published On 2022-04-23 15:17 IST   |   Update On 2022-04-23 15:17:00 IST
சென்னிமலை மாரியம்மன் கோவில் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னிமலை:

சென்னிமலை மாரியம்மன் கோவில் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னிமலை டவுன் பஞ்சாயத்துக்குட்பட்டது மாரியம்மன் கோவில் வீதி. இந்த வீதி சென்னிமலை& காங்கேயம் மெயின் ரோட்டி-னையும், சென்னிமலை கோவிலுக்கு செல்லும் மலை அடிவார ரோட்டினையும் இணைக்கும் முக்கியமான ரோடு.  

இந்த ரோடு பழைய ஆட்டோ, பழைய இரும்பு பொருட்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்-படுகிறார். 

மேலும் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ரோட்டின் அருகில் தான் வாரச்சந்தை கூடும். இந்த சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை நிறுத்த  முடியாமல் நிலை தடுமாறி வருகின்றனர். வாரச்சந்தை நடக்கும் நாட்களில் இந்த ரோட்டில் ஆக்கிரமிப்-புகளால் நடந்து செல்ல கூட இடம் இல்லாந நிலை உள்ளது. 

எனவே இந்த ஆக்கிரமிப்-புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News