உள்ளூர் செய்திகள்
அபிஷேக பாக்கத்தில் ஆற்றில் மணலை திருடி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
அபிஷேக பாக்கம் பகுதியில் குடியாற்றங்கரை உள்ளது இங்கு சட்ட விரோதமாக மணல் திருடப்படுவதாக தவளக் குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஆற்றில் மணலை திருடி 4 பேர் கொண்ட கும்பல் வேனில் ஏற்றிக் கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.
உடனே அவர்கள் 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கோட்டைமேடு பொறையாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரூபன் லூர்து நாதன் (வயது 21) ராஜ்குமார் (28) சாரதி (19) மற்றும் சிங்கிரிகுடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ரஜினி (36) என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணலை கடத்த பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.