உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மது குடித்த பெயிண்டர் பரிதாப சாவு

Published On 2022-04-23 15:04 IST   |   Update On 2022-04-23 15:04:00 IST
மனைவி பிரிந்து சென்ற வேதனையில்அளவுக்கு அதிகமாக மது குடித்த பெயிண்டர் பரிதாபமாக இறந்து போனார்.
புதுச்சேரி:

புதுவை உழவர்கரை வயல்வெளி வீதியை சேர்ந்தவர் கிரிஸ்தோப் (வயது36) பெயிண்டர்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கிரிஸ்தோப்பை விட்டு கலைச்செல்வி பிரிந்து சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் கிரிஸ்தோப் குடிப் பழக்கத்திற்கு ஆளானார். தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.

இதனார். அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. கடந்த 1 வாரமாக கிரிஸ்தோப் படுத்தபடுக்கையானார். இந்த நிலையில் நேற்று மதியம் கிரிஸ்தோப் வீட்டில் பேச்சு மூச்சி இன்றி மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து பார்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் கிரிஸ்தோப் பரிதாபமாக இறந்து போனார். 

இது குறித்து அவரது சகோதரர் பிரான்சுவா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News