உள்ளூர் செய்திகள்
புதுவை மாநில எல்லை பகுதியான மதகடிப்பட்டு பகுதியில் நடுரோட்டில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
புதுச்சேரி,23
புதுவை மாநில எல்லை பகுதியான மதகடிப்பட்டு பகுதியில் தமிழக பகுதியையும், புதுவை பகுதியையும் இணைக்கும் இடத்தில் புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.
எல்லை பகுதியையொட்டி உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்து வரும் வாகனங்கள் வளைந்து செல்வதற்காகவும் விப
த்து ஏற்படாத வண்ணம் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த பகுதியில் இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் புதுவையில் இருந்து தமிழக பகுதியை நோக்கி வரும் வாகனங்கள் பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளாகிறது.
புதுவையில் இருந்து தமிழக பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற வளவனூர் அருகே உள்ள சாலையம்பாளையம் பகுதியை சேர்ந்த கவி என்பவர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் போக்குவரத்து போலீசார் பேரிக்கார்டில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்றும், பேரிகார்டுகளை விபத்து ஏற்படாத வண்ணம் வைக்குமாறும் அப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்து போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.