உள்ளூர் செய்திகள்
திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிட வந்த கல்லூரி மாணவிகள்.

திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள்

Published On 2022-04-23 14:56 IST   |   Update On 2022-04-23 14:56:00 IST
உலக புவி தினத்தையொட்டி கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி அறிவியல் பிரிவு மாணவிகள் நேரில் பார்வையிட்டனர்.
கோபி:

உலக புவி தினத்தையொட்டி கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி அறிவியல் பிரிவு மாணவிகள் நேரில் பார்வையிட்டனர்.

நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மையியல், தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி, அவைகளை நுண் உரக் குடில் மையத்தில் அரைத்து உரமாக்குதல் பணிகளையும், மக்காத கழிவுகளை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் பணிகளையும், உயிரி எரிவாயு கூட பணிகளையும் விரிவாக விளக்கி கூறினார். 

பின்னர் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு உலக புவி தின விழிப்புணர்வு உரையாற்றினார். 

நிகழ்ச்சியில் பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் மைதிலி, முதன்மை செயல் அதிகாரி ஜெகதா லட்சுமணன், கல்லூரி தாளாளர் வெங்கடாசலம், இயற்பியல் பிரிவு துறைத்தலைவர் ராதிகா, பேராசிரியர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் அருள் பிரசாத், சத்யா, பரப்புரையாளர்கள் அருள், கிருஷ்ணன், பூங்கொடி, மஞ்சுநாதன், வைஷ்ணவி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News