உள்ளூர் செய்திகள்
சாலை மறியல்

அரசு- தனியார் பஸ் டிரைவர்கள் வாக்குவாதம்: காரைக்காலில் திடீர் சாலை மறியல்

Update: 2022-04-23 09:25 GMT
தனியார் பஸ் வரும் நேரத்தில் அரசு பஸ் இயங்கியதால் தனியார் பஸ் டிரைவர், அரசு பஸ் திருநள்ளாறு பிரதான சாலையில் சென்ற போது, சாலை நடுவே வழிமறித்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரைக்கால்:

காரைக்கால் திருச்சி இடையே, மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த பல நாட்களாக, திருநள்ளாரில் இருந்து தனியார் பஸ் காரைக்காலுக்கு செல்லும் நேரத்தில், அம்பகரத்தூரில் இருந்து காரைக்காலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டுள்ளது.

அரசுப் பஸ் இயக்கக் கூடிய நேரத்தை தவிர்த்துவிட்டு தனியார் பஸ் வரும் நேரத்தில் இயங்கியதால் தனியார் பஸ் டிரைவர் பலமுறை காரைக்கால் மாவட்ட போக்குவரத்து துறையில் புகார் செய்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நேற்று மாலை தனியார் பஸ் வரும் நேரத்தில் அரசு பஸ் இயங்கியதால் தனியார் பஸ் டிரைவர், அரசு பஸ் திருநள்ளாறு பிரதான சாலையில் சென்ற போது, சாலை நடுவே வழிமறித்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ் தனியார் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பஸ்ஸில் பயணிகள் பள்ளி முடித்து செல்லும் மாணவ மாணவிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும், திருச்சி பிரதான சாலையான காரைக்கால் திருநள்ளாறு சாலையில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, திருநள்ளாறு மற்றும் மாவட்ட போக்குவரத்து போலீசார் சமாதானம் செய்ததையடுத்து போக் குவரத்து சீரானது.

Tags:    

Similar News