உள்ளூர் செய்திகள்
தாளவாடி வனப்பகுதியில் யானை தாக்கி தொழிலாளி பலி
தாளவாடி வனப்பகுதியில் உறவினர்களுடன் புல் அறுக்க சென்ற தொழிலாளி யானை தாக்கி பலியான சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி நொய்தாலாபுரம் அல்லாபுரதொட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேவன் (47) தொழிலாளி. இவரது மனைவி மாஸ்தி (36). இவர்களது மகன் மகேந்திரன்.
மாதேவன் நேற்று காலை தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்களான பொம்பையன், மணி, செஞ்சி, மாதேவி, நாகம்மாள், மாலா ஆகியோருடன் சீமாறு புல் அறுப்பதற்காக தாளவாடி வனப்பகுதிக்கு சென்றார்.
பின்னர் சீமார்புல் அறுத்துக்கொண்டு மாலை 6 மணி அளவில் மீண்டும் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது அவர்கள் வனப்பகுதியில் உள்ள மாரப்பர்குட்டை பிரிவு அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென வந்த ஒற்றை யானை மாதேவனை தும்பிக்கையால் சுற்றி வளைத்து பிடித்து காலால் மிதித்தது. இதில் மாதேவன் பலத்த காயம் அடைந்தார். யானையை பார்த்த உறவினர்கள் கூச்சல் போட்டனர். இதையடுத்து யானை அங்கிருந்து சென்று விட்டது.
பின்னர் படுகாயம் அடைந்த மாதேவனை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாதேவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.