உள்ளூர் செய்திகள்
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மரக்கன்று நட்டு வைத்த போது எடுத்த படம்.

உலக புவி தினத்தையொட்டி 135 பள்ளிகளில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-04-22 15:46 IST   |   Update On 2022-04-22 15:46:00 IST
ஈரோடு மாவட்டத்தில் உலக புவி தினத்தையொட்டி 135 பள்ளிகளில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் கிருஷ்ணனுன்னி தொடங்கி வைத்தார்

ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உலக புவி தினத்தையொட்டி 135 பள்ளிகளில் 35 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் கிருஷ்ணனுன்னி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 22-ந் தேதி உலக புவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங் களில் மரக்கன்றுகள் நடுவ தற்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதன் தொடக்க விழா ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் இன்று காலை நடந்தது.  விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டெக்ஸ்வேலி இயக்குனர் உமா ராஜசேகர் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் அங்கு அடர் குறுவனம் அமைப்பதற்காக 2 ஆயிரத்து 500 சதுர அடியில் 800 மரக்கன்றுகள் நடப்பட்டன. 

தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள 40 அரசு பள்ளிக்கூடங்களில் அடர் குறுவனம் அமைக்கும் வகையில் தலா 800 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மேலும் 95 பள்ளிக் கூடங்களில் இடைவெளி விட்டு மரக்கன்றுகள் நடப் படுகிறது. எனவே மொத்தம் 135 பள்ளிக் கூடங்களில் 35 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட உள்ளன. இதேபோல் 395 பள்ளிக்கூடங்களில் மாடி தோட்டம் அமைக்கப் படுகிறது.
இந்த விழாவில் ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி ஜோதி சந்திரா, பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி மற்றும் அம்மன் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News