உள்ளூர் செய்திகள்
தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.

மூடப்பட்ட தனியார் நிறுவனம் மீண்டும் திறந்ததால் பரபரப்பு

Published On 2022-04-22 15:28 IST   |   Update On 2022-04-22 15:28:00 IST
கொடுமுடி அருகே மூடப்பட்ட தனியார் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கொடுமுடி:

கொடுமுடி அருகே மூடப்பட்ட தனியார் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையம் பகுதியில் அனுமதியின்றி தேங்காய் நார் கம்பெனி கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதையொட்டி இந்த கம்பெனியால் நிலத்தடி நீர் மற்றும்சுற்றுச்சூழல் பாதிக்கப் படும் என கூறி அந்த பகுதியை சேர்ந்த-பொது-மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு அனுமதி வழங்க- கூடாது என வலி-யுறுத்தியும் வந்தனர்.
 மேலும் சுற்றுச் சுழலுக்கு இடையூறு ஏற்படுத்தி மாசு உண்டாக்கி வரும் தேங்காய் நார் கம்பெனிக்கு சீல் வைக்க கோரி கடந்த ஆண்டு நடந்த கிராம சபா கூட்டத்தில் கிராம மக்கள்-கொடுத்த மனுவை ஏற்று தீர்மானம் நிறை-வேற்றப்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இதனை தொடர்ந்து நடை-பெற்ற பேச்சு-வார்த்தையில் ஆலை-நிர்வாகம் ஆலையை மீண்டும் திறந்து நடத்த மாட்டோம். பொருட்கள் எடுப்பதாக- இருந்தாலும் பஞ்சாயத்து நிர்வாகம், கிராம அலுவலருக்கு தகவல் தந்து தான் திறப்போம் என்று கூறி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த தேங்காய் நார் ஆலை திடீ ரென திறக்கப்பட்டு இருந் தது. இது குறித்த தகவல் அறிந்ததும் இச்சிப் பாளையம் பகுதி மக்கள் ஆலையின் முன்பு ஒன்று கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இது குறித்து போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத் துக்கு இன்ஸ்பெக்டர் முருகன்  மற்றும் போலீசார் வந்தனர். 
போலீசார் விசாரனையில் நாளை (அதாவது இன்று) ஆர்.டி.ஓ. ஆலையை பார்வையிட வருவதாகவும், அதற்காக திறக்கப்பட்டதாகவும் ஆலை நிர்வாகம் தரப்பில் கூறப் பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இத னால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற் பட்டது.

Similar News