உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

Published On 2022-04-22 15:22 IST   |   Update On 2022-04-22 15:22:00 IST
ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 28 - ந் தேதி நடக்கிறது.
ஈரோடு:

ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
28 - ந் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட பிரிவில் 2022-2023ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோருக்கான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன. 

இதில் பங்கேற்க விரும்புவோர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு ஊசி இரண்டு தவணைகள் செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் கொண்டு வர வேண்டும். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. 

மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போர் அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று, மாவட்ட மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை அவசியம் கொண்டு வர வேண்டும். 

அதேபோல மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் குறிப்பிட்ட பிரிவில் விளையாடுவதற்கு அந்தப் பிரிவைச் சார்ந்தவர் என உறுதி செய்வதற்காக அரசு வழங்கிய அடையாள அட்டையை அவசியம் கொண்டு வர வேண்டும். 

குறிப்பிட்ட பிரிவில் கலந்து கொள்பவர்கள் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டிகள் வரும் 28ஆம் தேதி காலை  7 மணிமுதல் வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கில் நடைபெறும்.

Similar News