உள்ளூர் செய்திகள்
காலிங்கராயன் வாய்க்காலில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்த காட்சி.

ஈரோட்டில் தொடர்ந்து பதிவாகும் 100 டிகிரி வெயில்

Published On 2022-04-22 15:16 IST   |   Update On 2022-04-22 15:16:00 IST
ஈரோட்டில் தொடர்ந்து 100 டிகிரி வெயில் கொழுத்தி வருவதால் மக்கள் நீர் நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் தொடர்ந்து 100 டிகிரி வெயில் கொழுத்தி வருவதால் மக்கள் நீர் நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் வருவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் பொது-மக்கள் கடுமையாக பாதிக்கப்-பட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள், முதியவர்கள் குழந்தைகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கும் வெயில் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை உச்சத்தை அடைகிறது. தொடர்ந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வீட்டில் புழுக்கம் அதிகள வில் உள்ளதால் பெண்கள், குழந்தைகள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க பொது மக்கள் அதிக அளவில் கரும்பு பால், குளிர் பானங்களை விரும்பி அருந்தி வருகின்றனர். இதேபோல் தர்பூசணி வியாபாரமும் தற்போது சூடுபிடிக்க தொடங் கியுள்ளது.

விடுமுறை நாட்களில் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுக்க தொடங் கியுள்ளனர். குறிப்பாக கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணைக்கு  தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் குடும்ப த்துடன் சென்று வருகின் றனர்.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோடு மட்டுமன்றி கோவை, சேலம், கரூர், நாமக்கல், போன்ற மாவட்டங்களில் இருந்து அதிகளவில் மக்கள் வருகின்றனர்.

இதேபோல் காலிங்க-ராயன் வாய்க்கால் செல்லும் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் குளித்து வெப்-பத்தை தணித்து வருகின்-றனர். அக்னி நட்சத்திரம் வெயில் வரும் மே மாதம் 4 - ந் தேதி தொடங்கி 28-ந்  தேதி வரை நீடிக்கிறது.

 இப்போதைய வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் என்ன செய்யப் போகிறோம் என மக்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

Similar News