உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொது மக்கள் அவதி

Published On 2022-04-21 15:38 IST   |   Update On 2022-04-21 15:38:00 IST
கந்தர்வகோட்டை பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.  

தினசரி குறைந்தது பத்து முறையாவது மின்வெட்டு ஏற்படுகிறது. அதிலும் இரவு நேரங்களில் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்கிறது. இரவு நேரங்களில் முதியவர்கள் குழந்தைகள் கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தால் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் பகல் நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் வியாபாரிகள் அரசு அலுவலகங்களில் பல்வேறு பணிக்காக வந்திருக்கும் பொதுமக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.  

மேலும் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், மாணவிகள் இந்த மின்வெட்டால் தங்களது கல்வி பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.  

கந்தர்வகோட்டையில் நிலவும் இந்த மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், அரசு மருத்துவமனை உள் நோயாளிகள், முதியோர்கள், சிறு குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.  

எனவே மாவட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும், மின்வெட்டு தொடராமல் சீராக  மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளன

Similar News