உள்ளூர் செய்திகள்
உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்த காட்சி.

பெண் யானை சிகிச்சை பெற்று மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பியது

Published On 2022-04-21 15:04 IST   |   Update On 2022-04-21 15:04:00 IST
தாளவாடி வனப்பகுதியில் மயங்கி கிடந்த பெண் யானை சிகிச்சை பெற்று மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பியது.
தாளவாடி:

தாளவாடி வனப்பகுதியில் மயங்கி கிடந்த பெண் யானை சிகிச்சை பெற்று மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.

இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட  தாளவாடி வனச்சரகம் பாலப்படுகை வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் காட்டு யானை நடமாடுவதாக வனத்-துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவுரையின்படி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை நடக்க முடியாமல் மயக்க நிலையில் கீழே படுத்துக் கிடப்பதை கண்டனர்.

இதையடுத்து உடனடியாக கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறை ஊழியர்கள் உதவியுடன் குடல் புழு நோயால் அவதிப்பட்ட  யானைக்கு சிகிச்சை அளித்தார்.  

சுமார் 3 மணி நேர சிகிச்சைக்குப்பின்  காட்டுயானை சற்று உடல்நலம் தேறியதால் மெல்ல எழ முயற்சித்தது. அப்போது வனத்துறை ஊழியர்கள் கயிறு கட்டி இழுத்து காட்டு யானையை எழுந்து நடக்கும்படி செய்தனர்.

தட்டுத்தடுமாறி எழுந்த யானை மெல்ல நடந்து  வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது காட்டு யானையை வனத்துறை ஊழியர்கள்  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Similar News