உள்ளூர் செய்திகள்
கீழ்பவானி வாய்க்காலுக்குள் தவறி விழுந்த விவசாயி வேதபால் உடலை தீயணைப்பு துறை வீரர்கள் மீட்ட காட்சி.

வாய்க்காலில் தவறி விழுந்த விவசாயி பலி

Published On 2022-04-21 12:12 IST   |   Update On 2022-04-21 12:12:00 IST
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் மீது படுத்து உறங்கி கொண்டிருந்த விவசாயி தவறி வாய்க்காலுக்குள் விழுந்து பலியானார்.
பெருந்துறை:

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் மீது படுத்து உறங்கி கொண்டிருந்த விவசாயி தவறி வாய்க்காலுக்குள் விழுந்து பலியானார்.

பெருந்துறை அடுத்துள்ள நிச்சாம்பாளையம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வேதபால் (வயது 58). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று வேதபால் அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் மீது படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வாய்க்காலுக்குள் விழுந்து விட்டார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி வாய்க்காலில் 100 மீட்டர் தொலைவில் அவருடைய உடலை மீட்டனர்.

இது குறித்து திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேதபால் உடலை மீட்டு பிரேதே பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News