உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவியை 8 மாத கர்ப்பிணியாக்கிய உறவினர்
பள்ளி மாணவியை 8 மாத கர்ப்பிணியாக்கிய உறவினரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே வாழமங் களம் வடுகபட்டி கிராமத்தை சேர்ந்தவர் 10&ம் வகுப்பு மாணவி. அதே பகுதியை சேர்ந்த உறவினரான அஜித் குமார் என்பவர் மாணவியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.
மாணவியின் பெற்றோரும் உறவினர் என்பதால் அதனை பெரிதாக கண்டுகொள்ளவிலலை. ஆனால் அஜித்குமாரின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் எல்லை மீறி சென்றுள்ளது. இதனை ஒரு கட்டத்தில் மாணவி தடுத்துள்ளார்.
அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த 5 வரு டங்களாக தனிமையில் அவர்கள் வெளியிடங்களில் சுற்றித்திரிந்து பல நேரங் களில் தனிமையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியின் உடல் நலனில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரது பெற்றோரை சந்தேகம் அடைய செய்தது. இதையடுத்து அவரிடம் கேட்டபோது, நடந்த விபரங்களை கூறினார். மேலும் மாணவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிந்தது. இதைக்கேட்ட பெற்றோர் தலையில் இடி விழுந்ததாக உணர்ந்தனர்.
பின்னர் இதுபற்றி அவர்கள் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரியிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அஜித்குமாரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.