உள்ளூர் செய்திகள்
புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி விழா
மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி விழா நடைபெற்றது. திங்கட்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர்களாலும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியாரின் தேர் பவனி விழா நடைபெற்றது.
இந்த தேர்பவனி விழாவில் தஞ்சாவூர், திருச்சி, தேவகோட்டை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவை முன்னிட்டு கந்தர்வக் கோட்டையில் இருந்து சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் செந்தில் மாறன் செய்திருந்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.