உள்ளூர் செய்திகள்
மின்துறை தலைவர் அறையை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்.

மின்துறை தலைவர் அறையை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

Published On 2022-04-20 15:04 IST   |   Update On 2022-04-20 15:04:00 IST
புதுவை அரசின் மின்துறையில் கட்டுமான தொழிலாளர்கள் பிரிவில் 350 பேர் பணியாற்றி வருகின்றனர்.
புதுச்சேரி:

கடந்த 6 ஆண்டாக துறையில் பணியாற்றினாலும் ஒர்க் சார்ஜ் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஊழியர்கள் பணிநிரந்தரம்  செய்யப்படவில்லை. 

இதனால் தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்துறை தொழில்நுட்ப சான்றிதழாளர் நலச்சங்கத்தின்  சார்பில் உப்பளத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் துறை தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

அறையை சுற்றிலும்  தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடர்பாக சான்றிதழாளர் நலச்சங்கத்தின் தலைவர் அருள்மொழி  கூறியதாவது:-

மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து சமீபத்தில் போராட்டம் நடந்தது. மின்துறை தனியார் மயமானால் நேரடியாக பாதிக்கப் படுவது நாங்கள் தான். 

ஏனெனில் பணிநிரந்தரம் செய்யப்படாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களை உடனடியாக பணி நிர ந்தரம் செய்ய வேண்டும். ஏற்கனவே உதவியா-ளர்களாக பணியாற்றியவர்களுக்கு வயர்மேன் பதவி வழங்க வேண்டும். 
அந்த பதவியில் எங்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

 4  ஆண்டாக எங்களுக்கு ஓ.டி.ஏ. வழங்கப்படாமல் உள்ளது. அதை வழங்க வேண்டும். எங்கள் போராட்டத்துக்கு தோழமை சங்கங்களான மின்துறை தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ. பில் கலெக்டர் கூட்டமைப்பு, எம்.என்.ஜி.டி.  ஆகிய சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளது. 

கோரிக்கையை தீர்க்காவிட்டால் அனைத்து ஊழியர்களையும் ஒன்று திரட்டி, தோழமை சங்கங்களுடன் இணைந்து அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Similar News