உள்ளூர் செய்திகள்
வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த போது எடுத்த காட்சி.

வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published On 2022-04-20 14:56 IST   |   Update On 2022-04-20 14:56:00 IST
வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
புதுச்சேரி:

அகில இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்களின் சங்கங்கள் இணைந்து பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து  வேலைநிறுத்த வெளிநடப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதன்படி புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்த வெளிநடப்பு போராட்டம் நடத்தினர். 

போராட்டத்துக்கு புதுவை கிளை தலைவர் உமா மகேஷ்வரி தலைமை வகித்தார். செயலாளர் அனிருத்ஷர்மா முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் கணேசன், மண்டல செயலாளர் கோவிந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பதவி உயர்வு, மாநில வேலை மாற்றம், பணியாளர்களின் விதிகளை இறுதி செய்தல் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அதிகாரிகள், ஊழியர்கள் இதில் பங்கேற்று கோஷம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். பொருளாளர் சிற்றரசன் நன்றி கூறினார்.

Similar News