உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெட்டன்விடுதி அரசு மேல் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் வரவேற்றார். ஆலங்குடி தீயணைப்புத்துறை அலுவலர் சரவணக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு ஒத்திகையை செய்து காண்பித்தனர்.
இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவ மாணவிகளுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி தீயணைப்பு மீட்பு குழுவினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.