உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பீடி தொழிலாளர்களுக்கு ரம்ஜான் போனஸ்

Published On 2022-04-20 13:54 IST   |   Update On 2022-04-20 13:54:00 IST
ரம்ஜான் பண்டிகையையொட்டி பீடி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தொழிற்சங்கம், நிறுவனங்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு நடந்தது.
ஈரோடு:

ரம்ஜான் பண்டிகையையொட்டி பீடி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தொழிற்சங்கம், நிறுவனங்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு நடந்தது.

பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு போனஸ் வழங்கப்படுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டுக்கான போனஸ் மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக கொங்கு மண்டல ஐக்கிய பீடி தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி) மற்றும் பீடி தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே ஈரோட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பீடி தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் சார்பில் சங்க பொது செயலாளர் சின்னசாமி, செயலாளர் அப்துல் வஹாப், பொருளாளர் சர்தார் ஆகியோர் கலந்து கொண்-டனர். 

பேச்சுவார்த்தையில் கடந்தாண்டு சுற்றிய பீடிகளின் அடிப்படையில் கணக்கிட்டு போனஸ் வழங்குவது என்றும், போனஸ் தொகை ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக வழங்கி முடிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 1,500 தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.

Similar News