உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 29-ந் தேதி ஏலம்

Published On 2022-04-20 13:44 IST   |   Update On 2022-04-20 13:44:00 IST
ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள 29-ந் தேதி ஏலம் நடக்கிறது.
ஈரோடு:

ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள 29-ந் தேதி ஏலம் நடக்கிறது.

போக்குவரத்து துறையில் வரி செலுத்தாத, இதர குற்றங்களுக்காக ஆர்.டி.ஓ. மூலம் பறிமுதலான, நிதியா ளர்களால் விடுவிக்கப்படாத 69 வாகனங்கள், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ளன.

 இவற்றை கடந்த 11-ந் தேதி ஏலம் விட அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் நிர்வாக காரணத்தால் ஏலம் தேதி மாற்றியமைக்கப்பட்டு வரும் 29-ந் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 11  மணி முதல் மாலை, 5  மணி வரை ஏலம் விடப்படுகிறது.

 விருப்பம் உள்ளவர்கள் வரும் 21-ந் தேதிக்கு பின் ஈரோடு கிழக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் பெறலாம்.

ஏற்கனவே செலுத்தியவர்கள் வரும் 27-ந் தேதி வரை ரசீதை காண்பித்து படிவம் பெறலாம். 

பூர்த்தியான விண்ணப்பம் வரும் 28-ந் தேதி மாலை 5:45 மணிக்குள் திரும்ப வழங்க வேண்டும்.

ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாளில் வரும் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நேரில் ஈரோடு கிழக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பார்வையிடலாம்.

Similar News