உள்ளூர் செய்திகள்
வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்புக்குழு ஆய்வு

Published On 2022-04-20 13:24 IST   |   Update On 2022-04-20 13:24:00 IST
பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தனர்.
ஈரோடு:

பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஆண்டு தோறும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்கள்  கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.

இந்த உயர் விளைச்சல் ரகங்களின் கருவிதைகளை  கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப் பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைபெருக்கம் மற்றும் சாகுபடிக்காக விதைப்பண்ணைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 

இந்த விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லிய மாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்யும் வகையில் வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு விதைப்பயிர் பூப் பருவம், அறுவடைப் பருவம் மற்றும் விதைக் குவியல் விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத் தரத்தினை உறுதி செய்கிறது. 

இந்த நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல் ஐ.ஆர் 20 மற்றும் பாசிப்பயிறு சி.ஓ 8  ரகத்தில் வல்லுநர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு விதைப்பயிர் பூப்பருவத்தில் உள்ளது.

மேலும் நெல் ஐ.ஆர்- 50, பாசிப்பயிறு சி.ஓ-7 மற்றும் உளுந்து வி.பி.என்&9 அறு வடைப் பருவத்தில் உள்ளது.  பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது.

இதில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், பேரா சிரியர்கள் உத்தராசு, தேவா ணந், குமரேசன் மற்றும் ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் மற்றும் பவானிசாகர் விதைச்சான்று அலுவலர்  மாரிமுத்து அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண் காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

மேலும் விதைப் பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறி விக்கப்பட்ட நோய்கள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்ய தேவையான அனைத்து நடை முறைகளையும் கடை பிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Similar News