உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-04-20 12:54 IST   |   Update On 2022-04-20 12:54:00 IST
சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 

இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகிய வைகளை உள்ளடக்கியதாகும். இவ்விருது பெற 15 வயது முதல் 35 வயதிக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.

ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க கூடாது. தகுதி உள்ள இளைஞர்கள் இணையதளம் மூலம் மே மாதம் 10-ந் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in அல்லது http://www.sdat.tn.gov.in  ஆகிய இணைய தளங்களில் உள்ளது. பூர்த்தி செய்ய ப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Similar News