உள்ளூர் செய்திகள்
இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை

இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை

Published On 2022-04-19 17:57 IST   |   Update On 2022-04-19 17:57:00 IST
நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தொடர் தாக்குதலை தடுக்க பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
காரைக்கால்:

காரைக்கால் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின், காரைக்கால் நகர செயலாளர் சபி, செயற்குழு உறுப்பினர்கள் பதுருதீன், கபிர், ஊடக பொறுப்பாளர் பைசல் உள்ளிட்ட நிர்வாகிகள், ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மாவிடம் ஓர் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தொடர் தாக்குதல் நடைபெற்று வருவது கண்டனத்திற்குரியது. மேலும், இஸ்லாமியர்கள் குறித்து சில அமைப்புகள் தவறான கருத்துக்களை பரப்பி வருவதும் கண்டனத்திற்குரியது. இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாதவாறு தடுத்து நிறுத்த, அனைத்து தரப்பு மக்களுக்கும் முதல் குடிமகனாக இருக்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News