உள்ளூர் செய்திகள்
ஆக்கிரமிப்புகள் அகற்றிய போது எடுத்த படம்.

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்

Published On 2022-04-19 15:36 IST   |   Update On 2022-04-19 15:36:00 IST
மொடக்குறிச்சி அருகே குரங்கன்பள்ளம் கசிவுநீர் திட்ட வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அருகே குரங்கன்பள்ளம் கசிவுநீர் திட்ட வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள புஞ்சைக் காளமங்கலம்  அடுத்த இந்திராகாந்திபுரம் பகுதியில் குரங்கன்பள்ளம் கசிவுநீர் திட்ட வாய்க்கால் செல்கிறது.

இந்த வாய்க்கால் சேமூர் முருங்கன்காடு முதல் சாக்க வுண்டன்பாளையம் வரை செல்கிறது. குரங்கன்பள்ளம் கசிவுநீர் வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 2013&ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராம லிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் உள்பட 28 ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தர விட்டது. இதனையடுத்து கடந்த 2014&ம் ஆண்டு 23 ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

மேலும் அந்த பகுதியில் இருந்த 5 ஆக்கிரமிப்புகள் அகற்ற படாமல் இருந்தது. அதனையும் அகற்ற வேண்டும் என கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. இதை தொடர்ந்து உடனடி யாக மற்ற ஆக்கிரமிப்புகளையும் அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 

இதனையடுத்து  பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் உதவி செயற்பொறி யாளர் சுப்பிரமணி, ஜெக தீஷ், முருகேசன் மற்றும் மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை 2 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.

Similar News