உள்ளூர் செய்திகள்
முதியவர் மீது வழக்கு

காரைக்கால் அம்பகரத்தூரில் புல் அறுக்க சென்றவரை தாக்கிய முதியவர் மீது வழக்கு

Published On 2022-04-19 15:15 IST   |   Update On 2022-04-19 15:15:00 IST
காரைக்கால் அம்பகரத்தூரில் புல் அறுக்க சென்றவரை தாக்கிய முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால்:

காரைக்காலை அடுத்த காரைக்கால் அம்பகரத்தூர் நல்லெழந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன்(வயது55). விவசாயியான இவர், வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, வளத்தாமங்களம் மெயின் சாலையை ஒட்டிய உமாகாந்தன் என்பவரது பம்புசெட் அருகே, இளங்கோவன் வயலில் புல் அறுக்க சென்றார். அப்போது ஏற்கெனவே முன் விரோதத்தில் இருந்த உமாகாந்தன்(69) இளங்கோவனை வழிமறித்து எங்கே போகிறாய் என கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

தொடர்ந்து, உமாகாந்தன், கீழே கிடந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து, இளங்கோவின் கண்ணில் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த இளங்கோவன், தேனூர் அரசு சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல்சிகிசைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். விபரம் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த திருநள்ளாறு காவல்நிலைய போலீசாரிடம், இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து, உமாகாந்தனை தேடி வருகின்றனர்.

Similar News