உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார்சாலை
தவளக்குப்பம் அருகே பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார்சாலை அமைக்கும் பணியை சபாநாயகர்ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி :
புதுவையில் தினமும் 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இக்கழிவுகளை அகற்றுவது நிர்வாகத்திற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இவைகள் வடிகால், ஆறுகள் மற்றும் கடல்களில் சேருகிறது. மழைக்காலத்தில் கழிவுகளால் கடுமையாக பாதிப்படைகிறது.
இந்த நிலையில் புதுவை சுற்றுசூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துடன் இணைந்து இடையார் பாளையத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார்சாலை அமைக்கும் முயற்ச்சியை மேற்கொண்டுள்ளது. இதன் தொடக்க விழா நடந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்துகொண்டு தார்சாலை போடும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் மற்றும் மாசு கட்டுப் பாட்டு வாரிய மூத்த செயற் பொறியாளர் ரமேஷ், பொதுப் பணித்துறை செயற் பொறியாளர், மணவாளன் உள்ளாட்சித்துறை செயற் பொறியாளர்கள் லட்சுமணன், திருநாவுக்கரசு, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், அலுவலக மேலாளர் வீரம்மாள், இளநிலை பொறியாளர்கள் ரகுராமன், சரஸ்வதி பங்கேற்றனர். மேலும் இந்த சோதனை தார்சாலை அமைக்கும் பணியினை பார்வையிட புதுவை நகராட்சி, உழவர்கரை நகராட்சி, பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, காரைக்கால், கோட்டுச்சேரி ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளில் இருந்து உதவி பொறியாளர்கள் இளநிலை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி, இடையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், நாகராஜ், பழனி, சீனுவாசன், செழியன், மோகன்குமார், ராஜா, கிருஷ்ணமூர்த்தி, மணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.